1. Home
  2. கோலிவுட்

விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்

விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்
விஷாலை சினிமாவில் தூக்கி விடுவதற்காக தளபதி விஜய் ஒரு காரியம் செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே விஷால் தொடர் பிளாப் படங்களை கொடுத்து வருகிறார். இது இப்படியே தொடர்ந்தால் அவரது சினிமா கேரியரே முடியும் நிலைக்கு வந்து விடும். இந்நிலையில் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் ஓரளவு ரசிகர்களை கவர்ந்தது.

ஆனாலும் விஷால் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காதது மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாதது அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஷாலுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குறைந்த வண்ணம் இருக்கிறது. இப்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

ஆகையால் விஷால் சினிமாவில் தூக்கி விட வேண்டும் என தளபதியே இறங்கி ஒரு காரியத்தை செய்ய இருக்கிறார். அதாவது இன்று மார்க் ஆண்டனி படத்தில் டீசர் வெளியாகிறது. அதை தளபதி விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இருக்கிறார். சமீபத்தில் தான் தளபதி இன்ஸ்டாகிராமில் நுழைந்தார்.

அவர் அக்கவுண்ட் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே நிறைய ரசிகர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் பதான் படத்தின் ட்ரெய்லரை விஜய் தான் வெளியிட்டு இருந்தார். அந்தப் படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

அதுமட்டுமின்றி படுத்து கிடந்த பாலிவுட் சினிமாவை ஷாருக்கான் தான் தூக்கி நிறுத்தினார். அதேபோல் இப்போது விஜய் விஷாலுக்காக அவரது மார்க் ஆண்டனி படத்தின் டீசரை வெளியிட முன்வந்துள்ளார். இப்போது இந்த டீசருக்காக விஷாலின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் விஷாலுக்கு இந்த படம் கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் இதன் மூலம் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்குவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். மேலும் டீசரை வைத்து படம் எந்த மாதிரியான கதை என்பது தெரியவரும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.