ஒரே படத்தால் லோகேஷை கவர்ந்த நடிகர்.. தானா சேர்ந்த கூட்டத்தால் ரீ என்ட்ரி-ல் கலக்கும் ஹீரோ

Director Lokesh: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசையுடன் நுழைந்தவர்கள் அனைவராலும் ஜெயிக்க முடியாது. ஆசையுடன் சேர்ந்து அவர்களுக்கு அதன் மேல் இருக்கும் நாட்டம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இதெல்லாம் தான் அவர்களை கை தூக்கி விடும். அது மட்டுமில்லாமல் சின்ன வயசுல இருந்து நம்ம பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் மனதுக்குள் ஊறி போனதால் தான் வெற்றி பெற முடியும்.

அப்படித்தான் லோகேஷும் சினிமாவிற்குள் வந்து ஜெயித்துக் காட்டியிருக்கிறார். சின்ன வயதில் இருந்தே பார்த்த பல விஷயங்களில் கற்பனையாக ஒரு கோட்டையை கட்டி அதன் மேல் ஆசையை வைத்து நுழைந்திருக்கிறார். அதனாலேயே லோகேஷ்க்கு எப்பொழுதுமே ஒரு சில நடிகர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையும், அவர்கள் திறமைகளை மனதில் வைத்து தூக்கி விட நினைப்பார்.

அந்த வகையில் சார்லி மற்றும் மன்சூர் அலிகான் போன்ற சில நடிகர்களை கையோடவே அவர் இயக்கிய படங்களில் கூட்டிட்டு வருகிறார். அப்படி வந்ததாலே அந்த நடிகர்களும் ரீ என்ட்ரி-யில் கலக்கிக் கொண்டு வருகிறார்கள். அதை போல் இன்னொரு நடிகரின் நடிப்பை பார்த்து கவர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லலாம்.

அதாவது உறியடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜயகுமார். இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் படத்தின் கதையும் நடிப்பும் ரொம்பவே பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு படம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விஜயகுமாருக்கு தானாகவே ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. ஏனென்றால் உறியடி படம் அந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகி இருக்கிறது.

இதன் மூலம் மறுபடியும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து கை தூக்கி விட வேண்டும் என்பதினால் தான் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கி விஜயகுமார் நடிப்பில் வெளிவந்த ஃபைட் கிளப் படத்தை லோகேஷ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் திறமைக்கு என்னைக்குமே லோகேஷ் இடம் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக சில நடிகர்களுக்கு உதவி செய்து வருகிறார்.