1. Home
  2. கோலிவுட்

பீஸ்ட் படத்திற்கு பின்னால் நடந்த மிகப் பெரிய சதி.. அந்த நடிகர் தான் காரணமா?

பீஸ்ட் படத்திற்கு பின்னால் நடந்த மிகப் பெரிய சதி.. அந்த நடிகர் தான் காரணமா?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் பயங்கர வைரல் ஆனது. ஆனால் படம் வெளியான பிறகு படம் குறித்து பல நெகடிவ் விமர்சனங்கள் வெளியானது. முதல் காட்சி ஆரம்பமானது முதலிலே சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மேலும் அவர்களால்தான் படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் படத்தின் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற ஒரு தகவலும் வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு அஜித் தான் காரணம் என்று பகீர் கிளப்பும் ஒரு விஷயம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் மிகப் பெரிய சதி வேலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியானது போது விஜய்யின் ரசிகர்கள் நிறைய இடையூறு செய்ததாகவும், அதனால் பீஸ்ட் படத்தை வெற்றி பெற விடக்கூடாது என்று அஜித் முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்காக இவர் சம்பந்தப்பட்ட ஆட்கள்தான் சமூக வலைத்தளங்களில் சில பொய்யான தகவல்களை பரவ விட்டதாகவும் சொல்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு மறுநாள் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதற்கும் இது தான் காரணமாம். நீண்ட காலமாகவே விஜய், அஜீத் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது அஜித் இதை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு சதி வேலையை அஜித்துக்கு தெரியாமல் அவருடைய மேனேஜர் தான் பார்த்ததாகவும், அது மட்டுமல்லாமல் விஜய்க்கு எதிராக அவர் பல வேலைகளை செய்து வருவதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனால் வெகு சீக்கிரமே இந்த விஷயம் அஜீத்தின் காதுகளுக்கு எட்டி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் அஜித்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறியவும் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மேனேஜருக்கு இதில் சம்பந்தம் இல்லாத பட்சத்தில் சோசியல் மீடியாவில் பற்றி எரியும் ரசிகர்களின் சண்டையை அஜித் தீர்த்து வைப்பாரா? இல்லை இவையெல்லாம் தெரிந்தும் அவர் அமைதி காத்து வருகிறாரா? என்பது போன்ற பல கேள்விகள் தற்போது திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.