அரசவை கவிஞர் போல் அரசவை இயக்குனரா.? விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்த பிரபலம்

Vignesh Shivan : இயக்குனர் விக்னேஷ் சிவன் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் நானும் ரௌடி தான் என்ற படமும், நயன்தாராவும் தான். மிகப்பெரிய உச்ச நட்சத்திரமான நயன்தாரா பெரிதும் பிரபலமில்லாத விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இப்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவனை மோசமாக சவுக்கு சங்கர் விமர்சித்திருக்கிறார். அதாவது அவர் இயக்கிய படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.அரசவை கவிஞர் போல அரசவை இயக்குனராக விக்னேஷ் சிவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் உதயநிதியின் நெருங்கிய நண்பராக இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு தான் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அஜித்தின் 62 ஆவது படத்தை லைக்கா தயாரிப்பதாக அறிவித்தது. இப்போது லைக்கா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பைனான்சியராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் அஜித் படத்திற்கும் விக்னேஷ் சிவனை இயக்குனராக அறிவித்தனர். ஆனால் அஜித்தின் படத்தில் எந்த கதைகளும் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அதோடு எந்த டெண்டரும் நடத்தாமல் விக்னேஷ் சிவனுக்கே அரசு சார்ந்த விஷயங்களை கொடுத்து வருகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆரம்ப பாடல் விக்னேஷ் சிவனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதேபோல் இப்போது நீங்க ரோடு ராஜாவா என்ற ஒரு விழிப்புணர்வு வீடியோவும் விக்னேஷ் சிவனுக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு இயக்குனராக விக்னேஷ் சிவனை நியமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானவர்களுக்கு கொடுப்பதற்கு இது யார் வீட்டு காசு என விளாசி இருக்கிறார் சவுக்கு சங்கர்.