6 முறை நேஷனல் அவார்ட் வாங்கிய பிரபலம்
ஒரு கலைஞனுக்கு சரியான அங்கீகாரம் என்பது விருது தான். ரசிகர்களிடமிருந்து பாராட்டு, கைதட்டல் தான் பெரிய விஷயம் என்றாலும் ஒரு விருது தான் அந்த கலைஞனுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தால் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அதில் உயரிய விருதான நேஷனல் அவார்டை உலகநாயகன் கமலஹாசன் ஒரு காலத்திற்குப் பிறகு எனக்கு இனி விருதுகள் வேண்டாம், வருங்கால சங்கதியினரை தேர்ந்தெடுத்து விருது கொடுங்கள் என கமிட்டிக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கு முன்னதாக கமல் 4 தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.
அதாவது கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும் தேவர் மகன் படத்திற்காக சிறந்த படம் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் கமல் தேசிய விருதை பெற்றிருந்தார். இந்நிலையில் கமலையே ஓரம் கட்டி அவரது நண்பர் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
அதாவது எஸ்.பி பாலசுப்ரமணியன் தான் கமலை காட்டிலும் ஆறு தேசிய விருது வாங்கியுள்ளார். கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார் எஸ்பிபி. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் தன்னுடைய இன்னிசை குரலால் எக்கச்சக்க பாடல்களை தந்துள்ளார்.
இந்நிலையில் தமிழில் மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை பாடல் பாடியதற்காக தேசிய விருது எஸ்பிபி பெற்றுள்ளார். இது தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்கள் பாடியதற்காக ஐந்து தேசிய விருதுகளை எஸ்பிபி வென்று இருக்கிறார். மேலும் எஸ்பிபி மொத்தமாக 116 விருதுகள் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலப் பிரதேச விருதுகள் 25 பெற்றுள்ளார். திரைப்பட ரசிகர்கள் விருது 20, ஃபிலிம்பேர் விருது 6, தமிழ்நாடு திரைப்பட விருது 4 ஆகியவை இதில் அடங்கும். இப்போது இவர் இல்லை என்றாலும் தனது பாடல்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
