புரோட்டா சூரியை பொறிவைத்து பிடித்த அதிகாரிகள்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு தெரியலையே.!

நடிகர் சூரி டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பினைப் பெற்று அதில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காமெடி நடிகராக வளர்ந்து வந்து சினிமாவில் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறார். இவர் தற்போது கதையின் நாயகனாக நடித்து வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இவர் சினிமாவை தாண்டி மதுரையில் அம்மன் உணவகம் உருவாக்கி இன்று அது மதுரையில் மட்டுமே 4 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அது ஒரு பிரபலமாக மாறியது. இவர் இந்த ஹோட்டல் தொழிலுக்கு வர இவர் புரோட்டா மீது உள்ள ஆர்வத்தால் இவருக்கு புரோட்டா சூரி என்ற பெயர் சினிமாவில் அடைமொழியாக மாறியது. அதை வைத்து ஹோட்டல் தொடங்க காரணமாக அமைந்தது.

சூரியின் உணவகத்தில் திடீரென்று வணிகவரித்துறை செந்தில் தலைமையில் 5 பேர் குழு சோதனை நடத்தினார்கள். உணவுப் பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்தது. இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டினை தனது சொந்த முயற்சியால் எடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல உணவினை வழங்கி வருகிறார். இந்த உணவகத்தை திமுக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார். அரசியல் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தன் கையில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்றும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீன் தன்வசப்படுத்த முயற்சி செய்து வருகிறார் என்ற செய்தியும் வெளிவருகிறது.

இதனால் மற்ற அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக இந்த வணிக வரி சோதனை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி போடாமல் சாப்பாடு வழங்குவதாக மக்கள் கம்ப்ளைன்ட் செய்ததாக இன்னொரு செய்தியும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. அதுமட்டுமில்லாமல் இவர் விஷ்ணுவிஷால் தந்தையின் மீது புகார் அளித்து அந்த கேசும் நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக விஷ்ணு விஷாலின் தந்தை போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அவர் மூலமும் இந்த விஷயம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எப்படியோ சூரியின் வளர்ச்சி இதன் மூலம் தடுக்க நினைக்கிறார்கள் மட்டும் தெரிகிறது. ஆனால் இதன் மூலம் சூரி இன்னும் பல வளர்ச்சியை பெறுவார் என்று அப்பட்டமாக தெரிகிறது. காரணம் சூரி கையில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதும் அதன் மூலம் பல அரசியல் தலைவர்களை வைத்து பல விஷயங்களை மறைமுகமாக செய்து வருகிறார் என்ற கோணத்தில் இவரை தடுக்கப் பார்க்கிறார்கள் மட்டும் உண்மை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.