லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் விஜய்யின் அடுத்த படத்திற்கான தகவல்கள் காட்டு தீயாக பரவி வருகிறது. தளபதி 68 படத்தை யார் எடுக்கப் போகிறார் என்று ஒவ்வொரு இயக்குனரும் போட்டி போட்டுக் கொண்டு விஜய்யிடம் கேட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் எங்களின் 100வது படத்தில் நீங்கதான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று செண்டிமெண்டாக கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய்யும் மறுப்பு தெரிவிக்க முடியாததால் சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி அந்த நிறுவனத்திற்கு கால்சீட்டையும் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.
மேலும் விஜய்யின் லியோ படத்தை முடித்த கையோடு அந்த நிறுவனத்தில் நடிக்கப் போகிறார் என்று உறுதியானது. ஆனால் தற்போது அவர்களிடம் இருந்து எந்த வித பதிலும் சொல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட நிறுவனம் யார் என்றால் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஓனர் ஆர்பி சௌத்திரி.
பிறகு உண்மையான காரணம் என்ன என்று தெரிந்த நிலையில் ஆர்பி சௌத்திரி நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்திருக்கிறார். அதாவது விஜய் இடம் சொல்வதற்கு முன் நாமே களத்தில் இறங்கி இயக்குனர்களிடம் கதையைக் கேட்டு அதில் எந்த கதை பெஸ்ட் என்று தேர்வு செய்து அதை விஜய் இடம் சொல்லலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்திருக்கிறார்.
ஆனால் நேரமும் காலமும் ஓடின தான் மிச்சம். இவரிடம் இருந்து எந்தவித ரெஸ்பான்ஸ் சரியாக வரவில்லை. பிறகு விஜய் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலை கூறாமல் மலுப்பிருக்கிறார்கள். அடுத்ததாக கட்டன் ரைட்டாக கேட்ட பொழுது தான் தெரிகிறது இன்னும் கதையே ரெடியாகவில்லை என்று.
இதை கேட்ட விஜய் என்னடா இது நமக்கு வந்த சோதனை நம்ம கால்சீட்டு கொடுத்தும் அவர்கள் இப்படி இழுத்தடிக்கிறார்கள் என்ற அப்செட்டில் அந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நைசாக எஸ்கேப் ஆகிவிட்டார். கைக்கு எட்டுனது இப்படி கோட்டை விட்டு அந்தரத்தில் அந்த தயாரிப்பு நிறுவனம் தொங்குகிறது.