1. Home
  2. கோலிவுட்

விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!
இயக்குனர் அவருடைய ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு நிறைவேறாமலேயே உயிர் பிரிந்து விட்டது.

Actor Vijay Director: விஜய் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் சில படங்கள் எப்பொழுதுமே நம்மால் மறக்க முடியாத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாகி ரசிகர்கள் கொண்டாடும் படமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நட்பை மையமாக வைத்து காதல், நகைச்சுவை என்ற அனைத்தையும் ஒரே படமாக வெளிவந்த பிரண்ட்ஸ் படம் விஜய்க்கு மிக திருப்புமுனையாக அமைந்தது.

இந்த சூப்பர் ஹிட் படத்தை எடுத்த இயக்குனர் சித்திக் திடீரென்று இரு தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலியால் உயிரிழந்து விட்டார். இவர் கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கி உள்ளார். அதில் தமிழில் பிரெண்ட்ஸ், எங்க அண்ணா, சாதுமிரண்டால், காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவருடைய இறப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் தற்போது இவரை பற்றி நடிகர் ரமேஷ் கண்ணா பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் இவரும் இயக்குனரும் பேசின விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது பிரெண்ட்ஸ் 2 படத்தை மீண்டும் எடுக்க வேண்டும்.

அதற்கு கதையை தயார் செய்து விட்டேன். கூடிய விரைவில் விஜய்யை வைத்து படத்தை ஆரம்பித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் எனக்கு நீண்ட காலமாக அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டு வருகிறேன். ஆனால் அது தற்போது வரை நடக்க முடியாமல் போய்விட்டது.

அதனால் எப்படியும் அவரை வைத்து ஒரு படத்தை எடுத்து விடுவேன் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக அவருக்கு ஏற்ற மாதிரியும் ஒரு கதையை ரெடி பண்ணி விட்டேன்.
கூடிய விரைவில் அதற்கான வேலையிலும் நான் இறங்கி அஜித்திற்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கப் போகிறேன் என்று ரமேஷ் கண்ணாவிடம் பேசியதாக கூறி இருக்கிறார்.

இப்படி என்னிடம் அவருடைய இரண்டு ஆசைகளையும் கூறிவிட்டு அதை நிறைவேற்றாமல் அவருடைய வாழ்க்கை முடிந்து விட்டதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த இரண்டு ஆசையும் நடந்திருந்தால் தமிழ் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடைய ஆசையை நிறைவேற்றாமல் அவர் உயிர் நிராசையாக போய்விட்டது என்று ரமேஷ் அண்ணா அவருடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.