Marimuthu: குணசேகரனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் குடும்பம்.. கடைசி ஆசையே நிறைவேற்றுவாரா சிவக்குமார், சூர்யா?

The family that fulfills Marimuthu’s long dream: சின்னத்திரை சாம்ராஜ்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு கிடைத்த கதாபாத்திரம் மூலம் தான் அந்த நாடகமே பட்டி தொட்டி எல்லாம் பெயர் வாங்கியது. தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார்.

அத்துடன் யுத்தம் செய், கொம்பன், பரியேறும் பெருமாள், மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் சீரியலில் நுழைந்த பிறகு தான் பேரும் புகழும் கிடைத்தது என்றே சொல்லலாம். ஆனால் அதனை தொடர்ந்து பெற முடியாமல் பாதியிலேயே இவர் உயிர் பிரிந்து விட்டது.

மாரிமுத்து ஆசைப்பட்டதற்கான காரணம்

இதற்கிடையில் சென்னையில் DLF அருகே சொந்தமாக இவருடைய கனவு இல்லத்தை பார்த்து பார்த்து கட்டிக்கொண்டு வந்தார். வாடகை வீட்டில் இருக்கும் பொழுது சுவற்றில் புது வீட்டிற்கான பிளானை மாட்டி அதை தினம் தினம் பார்த்து அந்த புது வீட்டுக்கு மெருகேற்றி வந்தார். இதைப் பற்றி இறப்பதற்கு முன் அவரே ஒரு youtube சேனலில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் காலமாகிவிட்டார்.

இதனால் அவருடைய நீண்ட நாள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று மாரிமுத்துவின் குடும்பத்தினர் அந்த வீட்டை தற்போது கட்டி முடித்திருக்கிறார்கள். அந்த வகையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மாரிமுத்துவின் குடும்பம் அளித்த பேட்டியில் இவருடைய மகன் அப்பா ஆசைப்பட்ட கனவை நிறைவேற்ற நேரம் வந்துவிட்டது.

அதாவது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைப்பதற்கு பிளான் பண்ணி வைத்திருக்கிறோம். அத்துடன் அப்பாவின் மிகப்பெரிய ஆசை என்னவென்றால் அந்த வீட்டிற்கு அம்மாவின் பெயரை வைக்க வேண்டும் என்பதுதான். அதனால் புது வீட்டுக்கு அம்மாவின் பெயரான மலர் என்று தான் வைக்கப் போகிறோம் என கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவின் ஆசை இன்னொன்றும் இருக்கிறது என்று தற்போது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேலராமமூர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது என்னவென்றால் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருக்கும் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து தான் அவருடைய கனவு இல்லத்தை திறக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததாக மாரிமுத்து தன்னிடம் கூறியதாக வேலராமமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

அதற்கு காரணம் சிவகுமாரின் குடும்பம் தனி மனிதன் வாழ்க்கையில் நிறைய பேருக்கு உதவி கரம் நீட்டி அவர்களுடைய வாழ்க்கையை பிரகாசமாக அமைவதற்கு காரணமாக இருந்ததால்தான் மாரிமுத்து இப்படி ஆசைப்பட்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய ஆசையை சிவக்குமார் மற்றும் சூர்யா நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடிகர் மாரிமுத்து மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.