1. Home
  2. கோலிவுட்

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்.. வெங்கடேசன் நாவலை கையில் எடுக்கும் ஷங்கர்

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்.. வெங்கடேசன் நாவலை கையில் எடுக்கும் ஷங்கர்

சமீபகாலமாக வரலாற்று நாவலை இயக்குனர்கள் படமாக எடுத்து வருகிறார்கள். பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தை எடுத்து வசூல் சாதனை படைத்தார். தற்போது தமிழ் மொழியிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தற்போது மற்றொரு வரலாற்று நாவலை படமாக எடுக்க உள்ளார்.

ராம் சரணை வைத்து ஆர்சி 15 மற்றும் கமலஹாசனின் இந்தியன் 2 பட வேலைகளில் ஷங்கர் பிஸியாக உள்ளார். இதைத்தொடர்ந்து எழுத்தாளர் மற்றும் மக்களவை உறுப்பினரான சு வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவலை ஷங்கர் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து வேள்பாரி நாவலும் படமாக எடுக்கப்பட்ட உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருக்கிறார். முதல் முறையாக வேள்பாரி படத்தின் மூலம் ஷங்கர், சூர்யா இணைய உள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை போல  வேள்பாரி படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இப்படத்தைப் பற்றிய சில விஷயங்களை விருமன் மேடையிலேயே சூசகமாக சூர்யா கூறியிருந்தார்.

அண்மையில் சூர்யா 42வது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் வேள்பாரி நாவலை தழுவி எடுக்கப்படுகின்றது என்ற ஒரு செய்தி இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால் ஷங்கர் தான் இந்த நாவலை படமாக எடுக்க உள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.