1. Home
  2. கோலிவுட்

லியோ பார்த்த பின் உதயநிதி கொடுத்த முதல் விமர்சனம்.. மொத்த சீக்ரெட்டும் போச்சா, கடுப்பில் லோகேஷ்

லியோ பார்த்த பின் உதயநிதி கொடுத்த முதல் விமர்சனம்.. மொத்த சீக்ரெட்டும் போச்சா, கடுப்பில் லோகேஷ்
உதயநிதி போட்ட ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் லியோ படத்தின் மொத்த சோலியும் முடிஞ்சு.

Leo Movie Review: நாளை ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்துவிட்டு திரை பிரபலங்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிடுகின்றனர். உதயநிதியும் தன்னுடைய பங்குக்கு முதல் விமர்சனத்தை கொடுத்து கொளுத்திப் போட்டு விட்டார். அவர் போட்ட ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் மொத்த சீக்ரெட்டும் உடைந்து போனதாக லோகேஷ் செம கடுப்பில் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆகுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த படம் துவங்கப்பட்ட நாளிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பதால் இன்னும் ரிலீசாகும் வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பீதியில் இருக்கின்றனர். அதே சமயம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காததற்கு உதயநிதி தான் காரணம் என்றும் தேவை இல்லாமல் பழி போட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் லியோ படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த பின்பு ‘விஜய் அண்ணா லியோ படம் சூப்பர். லோகேஷ் கனகராஜ் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மியூசிக்-கில் மாஸ்டர்’ என்றும் குறிப்பிட்டு கடைசி வரியில் படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லியதுடன் LUC என்ற ஹேஷ் டேக்கையும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு நாளாக தளபதி ரசிகர்கள் லியோ படம் LUC கான்செப்டில் உருவாகி இருக்கிறதா என்பதற்கான பதில் தேடி கலைத்துப் போனார்கள். ஆனால் இப்போது லியோ LUC மூவியாக உருவாகி இருக்கிறது என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இந்த விஷயத்தை லோகேஷ் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் கடைசியில் உதயநிதி முதல் விமர்சனமாக லியோ படத்தின் சீக்ரெட்டை எல்லாம் உடைத்தது படக் குழுவை காண்டேற்றி இருக்கிறது. ஆனால் இந்த ட்விட்டர் பதிவால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இவர்கள் நாளை ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரையரங்கில் வெறித்தனமாக கொண்டாடுவதற்கு இப்பவே தயாராகிவிட்டனர்.

லியோ பார்த்த பின் உதயநிதி போட்ட ட்விட்

லியோ பார்த்த பின் உதயநிதி கொடுத்த முதல் விமர்சனம்.. மொத்த சீக்ரெட்டும் போச்சா, கடுப்பில் லோகேஷ் udhayanidhi-twit-cinemapettai
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.