கமுக்கமாக இருந்து தனுஷின் கேரியரை சுக்கு நூறாக்க பிளான் பண்ணும் ஹீரோ.. பரம எதிரியாக நினைக்கும் அவலம்

Actor Dhanush: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அடுத்து ஹிந்தி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படி நடிப்பு அரக்கனாக மாறி வெற்றியை கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். இவர் சினிமாவுக்கு நுழைந்ததிலிருந்தே கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவரை மாற்றிக்கொண்டு திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். அத்துடன் தற்போது 100 கோடி பட்ஜெட்டில் இணைந்து நடித்து மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தில் சுற்றி வருகிறார்.

இவருடைய அந்தஸ்து தமிழையும் தாண்டி அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்து வருகிறார். அத்துடன் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இப்படி எல்லாபக்கமும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரின் கேரியரை காலி பண்ணுவதற்காக கமுக்கமான வேலைகள் அனைத்தும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் இவருக்கு போட்டியாக பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.

அதற்காக தற்போது சிவகார்த்திகேயன் பாம்பே பக்கம் வட்டமிட்டு வருகிறார். அதற்காக இரண்டு தயாரிப்பாளர்களை சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரைப் பொறுத்தவரை எப்படியாவது தனுசுக்கு மேலே ஒரு படி வளர்ந்து விட வேண்டும். பொதுவாக ரெண்டு நடிகர்களுக்கு போட்டி நிலவியது என்றால் அதில் ஒருவர் தான் எப்போதும் மேலோங்கி இருப்பார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன், தனுசை பரம எதிரியாக நினைத்து, இவரை விட ஒரு படி உயர வேண்டும் என்பதற்காக கமுக்கமாக இருந்து சில காரியத்தை செய்து வருகிறார். அத்துடன் ரஜினிக்கும் தனுஷுக்கும் இருக்கும் இடைவெளியை தெரிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தனுஷின் கேரியரை சுக்குநூறாக்க வேண்டும் என்பதற்காக பல வேலைகளை கமுக்கமாக பார்த்து வருகிறார்.