மயில்சாமியின் பாக்கெட்டில் கடைசியாக இருந்த பணம்.. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற போராடும் வாரிசுகள்

பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணமடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவருடைய கடைசி ஆசை என்ன என்பதும், அவருடைய சட்டை பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

மயில்சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மெட்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதில் மயில்சாமியின் இரண்டு மகன்கள் ஆன அன்பு மற்றும் யுவன் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய மூத்த மகன் அன்பு மயில்சாமியின் கடைசி ஆசை என்ன என்பதை தெரிவித்துள்ளார். மயில்சாமிக்கு அவருடைய இரண்டு மகன்களும் நல்ல நடிகர்களாக வரவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.

இருப்பினும் தன்னுடைய தந்தையின் ஆசைக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் அன்பு தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல மயில்சாமி கடைசியாக ஒரு படத்திற்கு 30 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதில் 25 ஆயிரம் ரூபாயை ஒருத்தருக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் இருக்கும் கொஞ்ச பணத்தை மயில்சாமி உடனே இருக்கும் சக்தி என்பவருக்கு கொடுத்து இருக்கிறார்.

மிஞ்சி இருந்த ஆயிரம் ரூபாயை மட்டும் தான் அவரது மகனுக்கு கொடுத்துள்ளாராம். இப்படி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கடைசியாக அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது வெறும் 30 ரூபாய் மட்டும் தான். இதை இசை வெளியீட்டு விழாவில் மயில்சாமி உடனே இருந்த சக்தி என்பவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

மேலும் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் இளைய மகன் யுவன் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு யுவன் ‘என்று தணியும்’, சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் யுவன் மற்றும் அன்பு இருவராலும் முன்னணி நடிகர்களாக வர முடியவில்லை. இருப்பினும் மனம் தளராத இவர்கள் தங்களது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களில் முழு முயற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.