உனக்கு 8 எனக்கு 18.. வாயடைக்க வைத்த விஜய் பட ஹீரோயினின் காதல்

காதலுக்கு மனசு தான் முக்கியம், கண்ணு, காது இப்படி எதுவும் தேவையில்லை. இந்த மாதிரி வசனங்களை நாம் பல திரைப்படங்களில் கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் நிஜ வாழ்க்கையில் கூட நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பல விசித்திரமான காதல் கதைகளும் இருக்கத் தான் செய்கிறது.

அப்படி ஒரு வித்தியாசமான காதல் கதைக்கு சொந்தமானவர்தான் உலக அழகி பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் இணைந்து தமிழன் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் உலக அழகி பட்டம் வாங்கும் போது அவரின் கணவர் எட்டு வயது சிறுவனாக இருந்தார் என்ற விவரம் பலரையும் வியப்பாக்கி இருக்கிறது. அதாவது பிரியங்கா சோப்ராவுக்கு இப்போது 40 வயது ஆகிறது. இவர் தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இது அப்போதே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த ஜோடி தன் திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர். அதன் பலனாக இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இருப்பினும் இந்த வயது வித்தியாசம் இப்போது வரை ஒரு கேலியாக தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.

அப்போது அவருக்கு 18 வயது. அதே சமயத்தில் இவரை விட 10 வயது குறைந்த அவருடைய கணவருக்கு எட்டு வயது. இதைத்தான் இப்போது பலரும் கொஞ்சம் நக்கல் கலந்து பேசி வருகின்றனர். அதாவது மனைவி உலக அழகி பட்டம் வாங்குவதை இவர் ஸ்கூல் பையனாக பார்த்து ரசித்து இருப்பார் என கூறி வருகின்றனர்.

மேலும் சின்ன பையனை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார் என பல சர்ச்சைகள் வந்தாலும் அவர்களின் திருமண வாழ்வு நன்றாகவே இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் காதல் ஆத்மார்த்தமானது. வயது வித்தியாசம் அதற்கு ஒரு தடை இல்லை என்று இந்த ஜோடி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலும் பேசி வருகின்றனர்.