1. Home
  2. கோலிவுட்

எனக்கு பின்னாடி வந்தவன் எல்லாம் ஹீரோ ஆயிட்டான்.. பொறாமையில் பொங்கிய மீசை ராஜேந்திரன்

எனக்கு பின்னாடி வந்தவன் எல்லாம் ஹீரோ ஆயிட்டான்.. பொறாமையில் பொங்கிய மீசை ராஜேந்திரன்
படம் பார்ப்பவர்களிடையே இவரா இது என வியக்கும் அளவிற்கு இவர் சிறப்புற நடித்திருப்பார்

Actor Meesai Rajendran: நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், சினிமா வாய்ப்பு பெற்று சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக வலம் வருபவர் தான் மீசை ராஜேந்திரன். இவர் சமீப காலமாக தன்னோடு வேலை பார்த்த சக நடிகரின் முன்னேற்றத்தை குறித்து கூறிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் வாய்ப்பு பெற்று தன்னை ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்தான் சூரி. அவ்வாறு இருக்க, தற்பொழுது இவர் தன் அடுத்த கட்ட முயற்சியாக, நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.

அவ்வாறு சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளிவந்த படம் தான் விடுதலை. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்ற தந்தது. மேலும் ஹீரோவாக தன் முதல் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு, ஈர்க்கப்பட்டது.

படம் பார்ப்பவர்களிடையே இவரா இது என வியக்கும் அளவிற்கு இவர் சிறப்புற நடித்திருப்பார். இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் தன்னுடன் சக நடிகராய் அதுவும் சப்போர்ட்டிங் ஆக்டராக பணி புரிந்த சூரி இப்பொழுது நடிகராக மாறியது பற்றி மனம் திறந்து தன் குமுறலை வெளிக்காட்டி வருகிறார் மீசை ராஜேந்திரன்.

அதுவும் எனக்கு பின்னாடி நடிக்க வந்த அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பா எனவும், மேலும் தன்னைவிட பேமெண்ட் கம்மியாக வாங்கிக் கொண்டிருந்தார் எனவும் கூறினார். மேலும் அப்பொழுது எனக்கு அசிஸ்டன்ட் இருந்ததாகவும் அவருக்கு அசிஸ்டன்ட் இல்லாத நிலை இருந்தார். ஆனால் தற்பொழுது 10 வருடத்திற்கு பிறகு அப்படியே உல்டாவாக மாறிவிட்டது.

இன்றும் படப்பிடிப்பிற்கு நான் பஸ்ஸில் போவது வழக்கமாக இருக்கும் நிலையில், ஒருநாள் அவரின் அசிஸ்டன்ட் இடம் சூரியைப் பற்றி கேட்டபோது அவர் பிளைட்டில் வருவார் எனவும் கூறியதாக சொல்லி மன வருத்தமடைந்தார். மேலும் எங்கேயோ ஒரு இடத்தில் நமக்கு மைனஸ் ஆகிறது என தெரிந்து தற்பொழுது, அதை மாற்றிக் கொள்ளும் நிலைமையில் இருப்பதாக மனம் உருகி பேசி வருகிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.