பொன்னியின் செல்வன் படத்தை மிகப் பிரமாண்டமாக எடுத்த முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். இப்படத்தின் ஆரம்ப முதலே ஒவ்வொரு விழாவையும் மிக விமர்சையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளதால் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
அதுமட்டுமின்றி உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என சினிமா ஆளுமைகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினத்துடன் இணைந்த லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.
லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்க பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் இடம் பணம் வாங்கியுள்ளது. இதனால் இந்த பிரம்மாண்ட விழாவிற்கு அன்பு செழியனை அழைக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்து இருந்தது. ஆனால் இதற்கு மணிரத்தினம் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
ஏனென்றால் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன் பிரபல தயாரிப்பாளர். இவர் மௌன ராகம், தளபதி, அஞ்சலி, சொக்கத்தங்கம் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். அப்போது மதுரை அன்பு இடம் பணம் வாங்கி தான் வெங்கடேஸ்வரன் படங்களை தயாரித்துள்ளார்.
கடைசியில் பணத்தை தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வெங்கடேஸ்வரன் மற்றும் அன்பு இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதனால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த வெங்கடேஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தன் அண்ணன் இறப்புக்கு காரணமானவர் இவ்விழாவுக்கு வரக்கூடாது என மணிரத்தினம் கூறியுள்ளார்.