நடிகர் மகேஷ் நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் இருந்தவரை வலுக்கட்டாயமாக இந்த கதைக்கு நீ நடித்தால் மட்டும் தான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் வசந்தபாலன் கூப்பிட்டு இருக்கிறார். அதன் பிறகு இவருக்கும் குடும்பத்தில் இக்கட்டான சூழ்நிலை இருந்ததால் வேறு வழியே இல்லாமல் நடிக்க சம்மதித்த படம் தான் அங்காடி தெரு.
இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். அதன் பின் இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பின்பு நடிப்பதற்கு ஆசை ஏற்பட்டதால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி இவர் நடித்த படமான கடைசி பெஞ்ச், யாசகன், வேல்முருகன், இரவும் பகலும் போன்று படங்களில் நடித்தார்.
ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே இவருக்கு சரியாக ஓடவில்லை. அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் தற்போது இது குறித்து மிகவும் மன வருத்தத்துடன் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் வந்திருந்தாலும் சினிமாவிற்கு என்ட்ரி ஆனதும் அதன் மேல் மோகம் அதிகமாகி விட்டது.
அதனால் பல படங்களில் நடித்து புகழடைய வேண்டும் என்று ஆசையால் ஒரு சில படங்களில் நடித்தேன். ஆனால் எனக்கு எந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய வேண்டும். எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு இதைப் பற்றி சொல்லிக் கொடுக்கவும் யாரும் இல்லை. அதனால் என்னால் சினிமாவில் சோபிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறி இருக்கிறார்.
அத்துடன் எனக்கு வந்த நல்ல படத்தை எல்லாம் மிஸ் பண்ணி விட்டேன். சில படங்களுக்கு நான் தான் முதல் சாய்ஸாக என்னை அழைத்தார்கள். அதிலும் அதர்வா நடித்த ஈட்டி படம், சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மற்றும் மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் நான் அதை தவற விட்டுட்டேன்.
அதனால் அங்காடித் தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் என்னால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது என்று மன வருத்தத்துடன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இவர் நடித்த அங்காடித்தெரு படத்தை இன்னமும் மறக்க முடியாது. எதார்த்தமான நடிப்பையும் அனைவரின் அனுதாபத்தையும் பெறக்கூடிய அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.