1. Home
  2. கோலிவுட்

200 கோடியும் போச்சு.. ஏ ஆர் முருகதாஸ் தலையில் இடியே இறக்கிய சம்பவம்

200 கோடியும் போச்சு.. ஏ ஆர் முருகதாஸ் தலையில் இடியே இறக்கிய சம்பவம்

AR Murugadoss : ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். இது தவிர பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து இயக்கிய படம் தான் சிக்கந்தர்.

இந்த படம் ரமலான் பண்டிகை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில் இதற்கான பிரமோஷனை படு பயங்கரமாக படக்குழு செய்திருந்தது. கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

சிக்கந்தர் படம் முன்பதிவிலேயே கிட்டத்தட்ட 50 கோடி வசூலை பெற்றுவிட்டது. ஆகையால் படம் வெளியான பிறகு வசூல் மழையில் நனையும் என படக்குழு காத்திருந்தது.

ஏ ஆர் முருகதாஸுக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆனால் தலையில் இடியை இறக்கும்படி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சிக்கந்தர் படம் மொத்தமும் லீக் ஆகிவிட்டது.

இதனால் படக்குழு மட்டுமின்றி சல்மான் கான் ரசிகர்களும் பேர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதே போன்ற பிரச்சனையை தெனிந்திய சினிமா நிறைய சந்தித்து இருக்கிறது.

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பெரிய நடிகரான சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் படம் இப்படியானது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இணையத்தில் லீக்கானதால் பெரும்பாலானோர் இப்படத்தை பார்த்து விட்டனர்.

இதனால் தியேட்டரில் சிக்கந்தர் படம் எவ்வளவு வசூல் பெறும் என்பதே கேள்வி குறிதான். ஆகையால் தயாரிப்பாளர் பெறும் நெருக்கடியை சந்திக்க இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.