1. Home
  2. கோலிவுட்

விஜய்க்கே நோ சொன்னவரை துரத்தும் தயாரிப்பாளர்.. தொடர் ஃப்ளாப்பால் படும் பாடு

விஜய்க்கே நோ சொன்னவரை துரத்தும் தயாரிப்பாளர்.. தொடர் ஃப்ளாப்பால் படும் பாடு

Actor Vijay: விஜய்யை வைத்து ஒரு படத்தையாவது இயக்கி விட மாட்டோமா என ஏங்காத இயக்குனர்களே கிடையாது. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை வைத்து படம் எடுத்தாலே மற்ற வாய்ப்புகள் எல்லாம் தானாக தேடி வந்துவிடும். ஆனால் விஜய் ஆஃபர் கொடுத்தும் வேண்டாம் என்ற ஒரு பிரபலமும் இருக்கிறார்.

ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். பிறகு லவ் டுடே மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். அதுவும் ஹிட்டடிக்கவே இப்போது தம்பி பிசியான ஹீரோவாக மாறி இருக்கிறார். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார்.

இவரிடம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று கேட்டு வருகிறாராம். ஏனென்றால் கோமாளி படத்தை தயாரித்தது இவர்தான். ஆனால் பிரதீப் லவ் டுடே வெற்றியடைந்ததிலிருந்து நடித்தால் இனி ஹீரோ தான் என அடம் பிடித்து வருகிறார்.

அதனாலயே விஜய் ஒரு ஆஃபர் கொடுத்தும் கூட இவர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அப்படிப்பட்டவரை ஐசரி கணேஷ் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் தவிர மற்ற படங்கள் அனைத்தும் இவருக்கு நஷ்டத்தை தான் கொடுத்துள்ளது.

அதிலும் நீண்ட இழுப்பறிக்கு பிறகு வெளிவந்த ஜோசுவா இமைப்போல் காக்க அட்டர் ஃப்ளாப் ஆனது. அதனாலேயே கோமாளி பட கூட்டணியை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்கலாம் என அவர் முயற்சி செய்து வருகிறாராம். அதற்காகவே இப்போது பழைய காம்போவை அவர் தேடி தேடி கூப்பிடுகிறார்.

ஆனால் ஜெயம் ரவி ஒரு பக்கம் பிசியாக இருக்கிறார். அதேபோல் பிரதீப் ரங்கநாதனும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். விஜய்க்கே நோ சொன்னவர் ஐசரி கணேஷுக்கு மட்டும் ஓகே சொல்வாரா என்ன. ஆனாலும் தயாரிப்பாளரின் நிலைதான் இப்போது பெரும் பாடாக இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.