எப்போதும் எளிமையை விரும்பும் சூப்பர் ஸ்டார் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சூப்பர் ஸ்டாராக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பல்வேறு விதமான சர்ச்சையான செய்திகள் வெளி வந்தாலும் கண் முன்னே கஷ்டப்படுபவர்களுக்கு ஓடிப்போய் உதவி செய்வது தான் இவருடைய வழக்கம். அப்படி செய்யும் உதவியை இவர் எப்போதுமே விளம்பரப்படுத்தியது கிடையாது.
அதனால் தான் மக்கள் இவரை இன்று வரை அரசியலில் இறங்கி நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய சூப்பர் ஸ்டார் இப்போது அந்த முடிவை கைவிட்டுள்ளார். இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் அவருக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களே அவரை இப்படி ஒரு முடிவுக்கு தள்ளிவிட்டது.
ஆனாலும் அவர் தற்போது ரசிகர்களுக்காக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் ரசிகர்களால் அவர் அந்த முடிவை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இடையில் அவருக்கு உடல் நல பிரச்சினை வந்தபோதும் கூட ரசிகர்களுக்காக இப்போது வரை நடித்து வருகிறார்.
அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அவர் இப்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய திரைப்படங்கள் வெற்றி பெற்றால் கொண்டாடும் தயாரிப்பாளர்கள் அதுவே படம் லாபகரமாக அமையாவிட்டால் இவரால் மட்டும் தான் நஷ்டம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்காக நஷ்ட ஈடு கொடுத்து வருகிறார். இப்படித்தான் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பாபா திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் வி ஏ துரை கடும் நெருக்கடிக்கு ஆளானார். தன் படைத்தால் ஒருவர் கஷ்டப்படுகிறாரே என்று நினைத்த ரஜினி அவருக்கு வடபழனி அருகில் ஒரு கல்யாண மண்டபத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்.
மேலும் அவர் உங்களுக்கு சினிமா கைவிட்டால் இந்த கல்யாண மண்டபம் வருமானத்தை கொடுக்கும் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே அந்த தயாரிப்பாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்தார். அதனால் தான் சூப்பர் ஸ்டார் எதிர்பாராத அளவுக்கு இப்படி ஒரு உதவியை செய்து அவரை வாழ வைத்திருக்கிறார்.