யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

டிக்டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் ஜி பி முத்து. ஆரம்பத்தில் இவர் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானாலும் தொடர்ந்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன் பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது அவருடைய சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவருடைய யூடியூப் சேனல் தற்போது லாபகரமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் 1.24 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவருடைய சேனலுக்கு இருக்கின்றனர்.

இதுவரை அவர் 594 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அவருடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் லட்சக்கணக்கில் லைக்குகளும், வியூஸ்களும் இருக்கிறது. அதில் அவர் பதிவிடும் ஒரு வீடியோவுக்கே நான்கு லட்சத்திற்கும் மேல் வியூஸ் கிடைக்கிறது. அதனாலேயே இவருக்கு நல்ல வருமானமும் வந்து கொண்டிருக்கிறதாம்.

அந்த வகையில் ஜிபி முத்து ஒரு மாதத்திற்கு குறைந்தது 1.25 லட்சம் வருமானம் பெறுகிறார். இது குறைந்தபட்ச வருமானம் மட்டும்தான். இதை விட அதிகமாகவும் அவருக்கு கிடைத்து வருகிறது. சில வருடங்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டபோது ஜிபி முத்து வருமானத்திற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாத சோகத்தில் அவர் தற்கொலை வரை முயன்றது பலருக்கும் தெரியும். இதை அவரே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது யூடியூப் சேனல் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது இவருக்கு யூடியூப் மூலம் எக்கச்சக்கமாக பணமழை கொட்டுகிறது. மேலும் இவர் அதிக அளவு பிரபலமாக இருப்பதால்தான் தற்போது பிக் பாஸ் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. யூடியூபிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஜி பி முத்துவுக்கு நிச்சயம் விஜய் டிவி நல்ல சம்பளத்தை தான் கொடுக்கும் என்று கூறுகின்றனர். அந்த வகையில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் போட்டியாளராகவும் இவர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.