1. Home
  2. கோலிவுட்

குட் பேட் அக்லியில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. அஜித், ஆதிக்-க்கு எவ்வளவு தெரியுமா.?

குட் பேட் அக்லியில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. அஜித், ஆதிக்-க்கு எவ்வளவு தெரியுமா.?

Good Bad Ugly : குட் பேட் அக்லி படம் 280 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் 500 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரங்களை பார்க்கலாம். அர்ஜுன் தாஸின் மனைவியாக நடித்த பிரியா வாரியர் குட் பேட் அக்லி படத்திற்கு 15 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ் 80 லட்சம் சம்பளம் பெற்று இருக்கிறார்.

காமெடி நடிகர்களான யோகி பாபு 70 லட்சமும், ரெட்டின் கிங்ஸ்லி 35 லட்சமும் சம்பளம் பெற்றுள்ளனர். அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காக இந்த படத்தில் பிரசன்னா நடித்திருந்தார். இதில் அவரது சம்பளம் 50 லட்சம் ஆகும்.

குட் பேட் அக்லி படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்

அடுத்ததாக விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்துடன் இந்த படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்து இருந்தார். இதற்காக 8 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார் திரிஷா. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்த நிலையில் 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் ஆணிவேராக இருந்தது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவருடைய முந்தைய படமான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குட் பேட் அக்லிக்கு 12 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இந்த பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் அஜித் உடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக படத்தின் கதாநாயகனாக பட்டையை கிளப்பிய அஜித் குட் பேட் அக்லி படத்திற்கு 165 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். இதற்கு முந்தைய விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் 105 கோடியாக இருந்தது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.