Wikki-Nayanthara: நடிகை நயன்தாரா சினிமா உலகில் பல காதல் சர்ச்சைகளின் சிக்கியவர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்து பணி புரியும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இதுவும் நயன்தாராவின் மற்ற காதல் கதை போல சில வருடத்தில் முடிந்து விடும் என்று எல்லோரும் விமர்சித்து வந்த நேரத்தில் ஆறு வருட காதலை கடந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுதே நயன்தாரா திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது. ஏனென்றால் நயன் ஒரு பக்கம் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம் என்று கேட்டால் அதற்கு நிறைய பணம் வேண்டும் சேர்த்து விட்டு சொல்கிறோம் என்று மழுப்பல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
திருமண விஷயத்தில் டிமிக்கி காட்டிக் கொண்டிருப்பது நயன் தான் என எல்லோருக்கும் தெரியவும் ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் அவசரமாக இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது. தற்போது இந்த அவசர கல்யாணத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் வெளியாகி இருக்கிறது. பயந்து விக்னேஷ் சிவன் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டாரோ, அது அப்படியே நடந்து கொண்டும் வருகிறதாம்.
நம்பர் ஒன் இடத்திலிருந்த நயன்தாராவின் அடுத்த குறிக்கோளாக இருந்தது பாலிவுட் தான். அவர் நினைத்தது போலவே இந்தி சினிமாவில் தனது முதல் காலடியையும் எடுத்து வைத்தார். இந்தி சினிமாவுக்கு போய் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டால் அடுத்து அவர் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார் என விக்னேஷ் சிவனுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் ஜவான் படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது திருமணமும் நடந்து விட்டது.
எதற்காக பயந்து விக்கி அவசர அவசரமாக திருமணம் செய்தாரோ, அவர் நினைத்தது போலவே அந்த விஷயம் நடக்கவும் ஆரம்பித்து இருக்கிறது. ஜவான் திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர, இந்தி சினிமா உலகின் தயாரிப்பாளர்கள் நயன்தாரா பக்கம் வந்து விட்டார்கள். நயன்தாராவுக்கு தற்போது அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம்.
கூடிய விரைவில் பாலிவுட் சினிமாவின் பிசியான நடிகையாக நயன்தாரா இருக்கப் போகிறார். நல்ல வேளை விக்னேஷ் சிவன் நடக்கப் போவதை முன்பே கணித்து சட்டென திருமணம் செய்து கொண்டார். இல்லையென்றால் கண்டிப்பாக நயன் இன்னும் பல வருடங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அடுத்தடுத்து சினிமாவை நோக்கி தான் சென்றிருப்பார்.