ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

ரஜினியின் அண்ணாத்த படத்திற்குப் பிறகு ஜெயிலர் படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்கு அடுத்து அவர் லால் சலாம் மற்றும் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி ரஜினி இடம் ஒரு கதையை கூறி இருக்கிறார்.

ஆனால் அவர் இரண்டு படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் கொஞ்சம் நடிப்பதற்கு டைம் கேட்டிருக்கிறார். ஆனால் அதுவரை இந்த இயக்குனரால் காத்திருக்க முடியாது என்பதற்காக ஒரு வாரிசு நடிகரை தேர்ந்தெடுத்து இருக்கிறார். எதற்காக என்றால் இந்த இயக்குனர், ரஜினிக்காக எழுதிய கதையில் ஒவ்வொரு விஷயங்களையும் அவரை மட்டுமே யோசித்து கதையை தயார் செய்து இருக்கிறார்.

அதனால் ரஜினிக்கு அடுத்தபடியாக இந்த நடிகர் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார். அந்த நடிகர் வேற யாரும் இல்லை சிலம்பரசன். இவரிடம் இயக்குனர் கதையை கூறிய பிறகு அந்த கதை பிடித்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டார். சிம்புவுக்கு இப்பொழுது நல்ல காலம் பிறந்து விட்டது என்றே சொல்லலாம். பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைத்து விட்டது. ஒரு மனுஷன் எவ்வளவு தான் அடி தாங்குவார்.

எங்க திரும்பினாலும் பிரச்சனை, சர்ச்சை என மாட்டிக்கொண்டு அத்துடன் படங்களும் சரியாக ஓடாமல் தவித்த நிலையில் இவருக்கு கைதூக்கி விட்ட படமாக மாநாடு வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு வெந்து தணிந்தது காடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இப்பொழுது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பத்து தல படம் இந்த மாதம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இதற்கு அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

கமல் முழு முயற்சியுடன் தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதாவது அவர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இதில் சிவகார்த்திகேயன் படம் தாமதம் ஆவதால் உதயநிதி படத்தை முதலில் எடுக்க பிளான் போட்டிருந்தார். ஆனால் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்து கமலின் படத்தில் இருந்து விலகி விட்டார். அதனால் கமலின் பார்வை இப்பொழுது சிம்புவின் பக்கம் திரும்பிவிட்டது.