லிங்குசாமியை அசிங்கப்படுத்திய தியேட்டர் உரிமையாளர்.. வெறிகொண்டு எடுத்த அடுத்த படமே 225 நாள் ஓடி சாதனை

விக்ரமனின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லிங்குசாமி, 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் திருப்பதி ப்ரொடக்சன் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் படங்களை தயாரித்தும் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஜித் குமார் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ஜீ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இடையே வெளியானது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இதனால் மாயவரத்தில் இருந்து ஒரு தியேட்டர் அதிபர், லிங்குசாமி நம்பருக்கு போன் செய்து மானங்கெட பேசியிருக்கிறார்.

‘என்னய்யா படம் எடுத்து இருக்க உன்னை நம்பி நான் தியேட்டருக்கு காசு செலவு பண்ணி சுண்ணாம்பு எல்லாம் அடித்து வைத்து இருந்தேன். குப்பை மாதிரி படத்தை எடுத்து வச்சிருக்க. ஒரு படம் இரண்டு படத்திலேயே சம்பளத்தை ஒரு கோடி ஏத்திட்ட. உன்ன நம்பி படத்தை வாங்குனா, இப்ப நான் நஷ்டத்தில் மாட்டிக்கிட்டேன். குப்பை படத்தை எடுத்து ஏன் எங்களை இப்படி பாடா படுத்துற’ என போனில் திட்டி உள்ளார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் லிங்குசாமி மன்னித்து விடுங்கள், இனிமேல் அது நடக்காது என்று சொல்லி சமாதானப்படுத்தினாராம். இப்படி திரையரங்கு உரிமையாளரிடம் அசிங்கப்பட்டு போன லிங்குசாமி விஷால் நடிப்பில் சண்டை கோழி படத்தை அதே வருடம் வெறிகொண்டு வெளியிட்டு வெற்றி பெற்றார்.

சண்டைக்கோழி 225 நாட்கள் ஓடிய திரைப்படம். இந்த படத்தில் விஷாலுடன் மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் விஷாலின் சினிமா கெரியருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது

இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் சொல்லும்போது, அவர் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி லிங்கசாமியை அனுப்பி விட்டார். விஜய் நடித்திருந்தால் இந்த படம் இன்னும் அதிக வசூல் அதிக நாட்கள் ஓடியிருக்கும் என லிங்குசாமி தற்போது பேசியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →