Udhayam Theatre : சமீபத்தில் சென்னையில் முக்கிய அடையாளமாக இருக்கும் உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. மேலும் இந்த இடத்தை காசாகிராண்ட் வாங்கியுள்ளதாகவும் அங்கு காம்ப்ளக்ஸ் கட்ட உள்ளதாக கூறப்பட்டது.
உதயம் தியேட்டர் மட்டுமல்லாமல் சமீபகாலமாக பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஓடிடியின் ஆதிக்கம் தான் என்று சொல்லப்படுகிறது. வாரம் வெள்ளிக்கிழமை என்றால் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை காட்டிலும் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது.
போதாக்குறைக்கு தியேட்டரில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது. இதனால் அதன் பிறகு தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைய தொடங்குகிறது. அதிலும் சிலர் ஓடிடியில் வெளியான பிறகு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.
Also Read : ஓடிடி-யில் நடுநடுங்க வைத்த 5 மலையாள திரில்லர் படங்கள்.. நடிப்பு ராட்சசனாக மிரட்டும் ஜோஜி பாசில்
ஆகையால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. படங்கள் தியேட்டரில் வெளியான பிறகு எட்டு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொது குழு கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் பொழுதுபோக்கு 8% சதவீத வரியை நீக்க வேண்டும், தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து வைக்க உள்ளதாக திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி கொடுத்திருக்கிறார்.
Also Read : பிப்ரவரி 16-யை குறிவைத்து ஓடிடியில் வெளியாகும் 23 படங்கள்.. மீண்டும் வசூல் வேட்டைக்கு தயாராகும் கேரளா ஸ்டோரி