ஷாருக்கான் கேட்டால் லிமிட்டே கிடையாது.. நன்றியை வேற லெவலில் காட்டும் திருமணம் முடிந்த தீபிகா
ஷாருக்கான் கேட்டால் மட்டும் எந்த லிமிட்டும் இல்லாமல் நடிக்க தயாராக இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் தீபிகா படுகோன் தமிழிலும் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து பதான், ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஜவான் திரைப்படத்தில் இவர் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் பதான் திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா படுகோன் ஆடிய கவர்ச்சியான ஆட்டம் பலரையும் மூச்சடைக்க வைத்தது. பிகினி உடையில் அவருடைய டான்ஸை பார்த்த பலரும் திருமணம் ஆன பிறகும் கூட எதற்காக அவர் இப்படி நடிக்க வேண்டும் என்ற ரீதியில் விமர்சனம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் ஒரு காட்சியில் அவர் காவி உடை அணிந்து ரொம்பவும் கிளாமராக ஆடியது அரசியல் ரீதியாக சில பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படி கொழுந்துவிட்டு எரிந்த இந்த விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் தீபிகாவுக்கு பல மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டதால் தான் அவர் எந்த கண்டிஷனும் இல்லாமல் இந்த அளவுக்கு கிளாமராக நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் ஷாருக்கான் கேட்டதற்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஏனென்றால் அவரை பாலிவுட் திரையுலகில் அறிமுகப்படுத்தியது ஷாருக்கான் தான். அவருக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படத்தில் நடித்த தீபிகா முதல் படத்திலேயே பேரும் புகழும் பெற்றார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அதனாலேயே தீபிகாவுக்கு ஷாருக்கான் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும் இருக்கிறது. அதனால் தான் அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது எந்த கண்டிஷனும் சொல்லாமல் சம்மதம் கூறி இருக்கிறார். அதற்காக அவர் இந்த அளவுக்கா கவர்ச்சி காட்டுவார் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். ஏனென்றால் அவர் கணவருடன் இணைந்து நடித்த படத்தில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியது கிடையாது. ஆனால் ஷாருக்கான் கேட்டால் மட்டும் எந்த லிமிட்டும் இல்லாமல் படு ஓப்பனாக நடிக்கவும் தயாராக இருக்கிறாராம் தீபிகா. இந்த விஷயம் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.
