1. Home
  2. கோலிவுட்

Fahadh Fassil: பகத் பாஸிலின் ஒன் மேன் ஷோ.. ஆவேசம் தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியான 2 ஹீரோக்கள்

Fahadh Fassil: பகத் பாஸிலின் ஒன் மேன் ஷோ.. ஆவேசம் தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியான 2 ஹீரோக்கள்

Fahadh Fassil: மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஏனென்றால் இவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார்.

அதிலும் மாமன்னன் படத்தில் இவருடைய கேரக்டர் சோசியல் மீடியாவையே ஆட்டி படைத்தது. அதை அடுத்து மலையாளத்தில் வெளிவந்த ஆவேசம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் 155 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பகத் பாசில் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆக்சன் காமெடி படமான இதில் ரங்காவாக வரும் அவரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதனாலயே படம் ஓடிடியிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவும் முன்னணி தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் ஒரு பெரிய நிறுவனம் இதன் உரிமையை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆவேசம் தமிழ் ரீமேக்

அப்படி இருக்கும் பட்சத்தில் பகத் பாஸில் அளவுக்கு நடிக்கக்கூடிய தமிழ் நடிகர் யார் என்பதையும் யோசிக்க வேண்டும். அதன்படி தனுஷ் அல்லது விஜய் சேதுபதி இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷை பொருத்தவரையில் அசுரன் படத்தில் வரும் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி. மாரி போன்ற ரகடான கேரக்டராக இருந்தாலும் சரி அவருக்கு எல்லாமே கைவந்த கலை.

இவரை போல் தான் விஜய் சேதுபதியும் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதனாலயே இவர்கள் இருவரில் ஒருவர் நடிப்பது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக சொல்ல முடியும். ஆனாலும் தற்போது கசிந்துள்ள தகவல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.