Thani Oruvan 2 Update: ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முழு முக்கிய காரணம் படத்தின் வில்லன் கேரக்டர்தான். நடிகர் அரவிந்த்சாமி இந்த கேரக்டரை மக்கள் மனதில் பதியும்படி நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது. முதல் பாகத்தில் அரவிந்த்சாமி இறந்து விட்டது போல் காட்டப்பட்டதால், அதே அளவுக்கு வெயிட்டான வில்லன் கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பட குழு திணறிக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு இந்த 5 வில்லன்களை படத்தின் இயக்குனர் தேர்வு செய்து வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்களை விட, வில்லனாக நடிக்கும் படங்களுக்குத்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மாஸ்டர், பேட்ட, விக்ரம் போன்ற படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருந்தார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.
பகத் பாசில்: மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு ஏற்கனவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இவர் அடுத்து தமிழில் எப்போது படம் பண்ணுவார் என ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள். பகத் பாசிலை தனி ஒருவன் 2 வில் வில்லனாக நடிக்க வைத்தால் கண்டிப்பாக அவருக்காகவே படத்தின் ஹைப் அதிகமாகும்.
எஸ் ஜே சூர்யா: எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதை தன்னுடைய ஸ்டைலில் நடித்து, வித்தியாசம் காட்டி விடுவார் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவரையும் தனி ஒருவன் 2 வில் வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்கும் ஐடியாவில் இயக்குனர் மோகன் ராஜா இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் தற்போது பிரபாஸ் மற்றும் அமிதாபச்சன் நடித்துக் கொண்டிருக்கும் கல்கி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அதேபோன்று தனி ஒருவன் 2ல் கமலஹாசன் வில்லனாக நடித்தால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
மோகன்ராஜா: நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தனி ஒருவன் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது, இரண்டாம் பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இவர், இந்த பாகத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் அவரே நடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.