அடுத்தடுத்து வெளியாகும் 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. தக் லைஃப் மாதிரி பல்பு வாங்காம இருந்தா சரி தான்

Thug Life: சில தினங்களுக்கு முன்பு வெளியான தக் லைஃப் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. படத்தை பார்த்த அனைவரும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுத்து வருகின்றனர்.

இதனால் வசூல் பின்னடைவை சந்தித்துள்ளது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது பல்பு வாங்கி இருக்கிறது. இதை அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

அதில் வரும் 20ம் தேதி தனுஷ் நடிப்பில் குபேரா ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. அப்போது தனுஷ் ஆவேசமாக பேசியது கூட சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இவருடைய ரசிகர்கள் சிம்புவை டார்கெட் செய்து தக் லைஃப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் 20ஆம் தேதி நிச்சயம் ஒரு சம்பவம் நடக்கும்.

5 பெரிய பட்ஜெட் படங்கள்

அடுத்ததாக ஆகஸ்ட் 14 கூலி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்ற கருத்து கணிப்பு நீண்ட நாட்களாக உள்ளது.

ஆனால் இப்போது பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கூட ரசிகர்களை கவர தவறி விடுகிறது. அதிலும் இப்பட ரிலீஸ் போது கமல் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்பதும் தெரிந்த கதை தான். அதை மீறி படம் கல்லா கட்டுமா என பார்ப்போம்.

அடுத்ததாக செப்டம்பர் 5 சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி வெளிவருகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதி தனுஷின் இட்லி கடை வெளியாகிறது.

அதேபோல் சூர்யா 45 படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இதில் எந்த படம் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யும் வசூலை வாரிக் குவிக்கும் என சினிமா விமர்சனங்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.