1. Home
  2. கோலிவுட்

தெலுங்கு பக்கம் சாய்ந்த 4 ஹீரோக்கள்.. சூர்யாவுக்கு லக் அடிக்குமா.?

தெலுங்கு பக்கம் சாய்ந்த 4 ஹீரோக்கள்.. சூர்யாவுக்கு லக் அடிக்குமா.?

Suriya: இப்போது டாப் ஹீரோக்கள் அனைவரும் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் அக்கட தேசத்து இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து இப்போது நம் ஹீரோக்கள் தெலுங்கு இயக்குனர் பக்கம் சாய்ந்து உள்ளனர். அதன்படி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார். நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யாவுக்கு லக் அடிக்குமா.?

அதேபோல் கார்த்தி சமீபத்தில் நானி நடிப்பில் வெளிவந்த ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதன் அடுத்த பாகம் அதாவது ஹிட் 4-ல் இவர்தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.

இந்த பாகத்தையும் சைலேஷ் கொலானு தான் இயக்கப் போகிறார். இதை அடுத்து சூர்யாவும் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அதன்படி சூர்யா 46 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜி வி பிரகாஷ் இசையில் மமிதா பைஜூ ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

நிச்சயம் இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரும் ஹிட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ரெட்ரோ அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது. அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இப்படம் இருக்க வேண்டும் என சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு நடிக்கிறாராம்.

இந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரும் இணைந்திருப்பது தான் ஆச்சரியம். அனேகமாக அவருடைய அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குவார் என்ற ஒரு தகவல் இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் பரவுகிறது. ஆனால் இதன் அதிகாரபூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக தற்போது தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் ஹீரோக்களுடன் கைகோர்த்துள்ளனர். அதேபோல் பிறமொழி தயாரிப்பாளர்களும் தமிழ் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது .

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.