80% வாக்குகளை கைப்பற்றிய போட்டியாளர்.. அவமானப்பட்டு பிக்பாஸை விட்டு வெளியேறப் போவது இவர் தான்

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் பற்றிய விவாதம் தான் சோசியல் மீடியாக்களில் அதிகமாக இருக்கிறது. அதிலும் ட்விட்டர் தளத்தில் பிரதீப்புக்கு ஆதரவாக பல கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், பிராவோ, பூர்ணிமா, ஐஷு ஆகியோர் இடம் பிடித்தனர். இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் இப்போது பூர்ணிமா மற்றும் ஐஷு இருவரில் ஒருவரை வெளியேற்ற தயாராகி வருகின்றனர். ஏனென்றால் இந்த பீசுகள் நிச்சயம் வீட்டை விட்டு அனுப்பப்பட வேண்டியவர்கள் தான்.

அந்த அளவுக்கு இவர்கள் மீதும் மாயா, நிக்சன், ஜோவிகா ஆகியோர் மீதும் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். தங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என அதிமேதாவி போல் நடந்து கொள்ளும் இந்த குரூப்பை பார்க்கும் போது பற்றி கொண்டு வருகிறது. அதனாலேயே இப்போது இவர்களுடைய பெயர் சோசியல் மீடியாவில் நாறிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அர்ச்சனா தான் அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். அந்த வகையில் 123160 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக விசித்ரா, தினேஷ், பிராவோ ஆகியோர் இருக்கின்றனர். இதில் கடைசி இரண்டு இடத்தில் ஐஷு, பூர்ணிமா இருக்கின்றனர்.

அதன்படி பூர்ணிமாவுக்கு 18064 ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதேபோன்று ஐஷுவுக்கு 18030 ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இப்படி மிக சில வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் இவர்களில் பூர்ணிமா நிச்சயம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஏனென்றால் பிரதீப் விஷயத்தில் இவர் சொன்ன பொய் மன்னிக்க முடியாதது.

தவறு செய்யாதவர் மேல் அபாண்டமாக இப்படி ஒரு பழியை சுமத்தியது இவர்களின் வன்மத்தை அப்பட்டமாக காட்டுகிறது. இதற்கு கமலும் ஒரு விதத்தில் துணை போயிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம். அந்த வகையில் பூர்ணிமா இந்த வாரம் உச்சகட்ட அவமானத்தோடு தான் வெளியேறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

biggboss7-voting
biggboss7-voting
vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →