கவுண்டமணியை பார்த்து அரண்டு போன கமல்.. சுத்தமா பிடிக்காமல் போவதற்கு இது தான் காரணம்

Actor Kamal-Goundamani: பன்முக திறமை கொண்டு, தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக பெரிதும் பேசப்பட்டு வருபவர்தான் உலக நாயகன் கமலஹாசன். அவ்வாறு இருக்க ஒரு காலகட்டத்தில் இவரையே அலற வைத்த ஒரு நகைச்சுவை நடிகரை பற்றிய சில தகவலை இங்கு காணலாம்.

தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வால் எந்த வசனத்தையும் பொருட்படுத்தாமல் நகைச்சுவையில் அடிச்சு தூக்கிய ஜாம்பவான் தான் கவுண்டமணி. ஒரு காலகட்டத்தில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை எனவும் சொல்லலாம்.

அந்த அளவிற்கு பேரும் புகழையும் பெற்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகரை கண்டு, உலகநாயகன் வியந்ததும் உண்டு. மேலும் அந்த காலகட்டத்தில் இவர் இடம் பெறும் படத்திற்கே விநியோகிஸ்தர்கள் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

அந்த சூழ்நிலையில் கவுண்டமணியை தவிர்க்க முடியாமல் படங்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர்களும் உண்டு. இருப்பினும் இவர் யாரையும் பொருட்படுத்தாமல் கலாய்த்து வந்ததால் இவரை ஒதுக்க நினைத்தவர்களுக்கு சவாலாய் முன்னேறியவர்.

அவ்வாறு கமலுடன் இணைந்து பல படங்கள் இவர் நடித்திருந்தாலும், ஒரு காலகட்டத்தில் கமல் பிரபலமான பிறகு இவர் நடந்து கொண்டது பிடிக்காமல் இவர் படங்களை ஏற்க மறுத்துள்ளார். இந்த காரணத்தால் தான் இவர்கள் இருவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களை மட்டுமே நடித்துள்ளனர்.

அவ்வாறு இடம் பெற்ற படங்கள் 16 வயதினிலே, இந்தியன், சிங்காரவேலன், பேர் சொல்லும் பிள்ளை போன்ற குறிப்பிட்ட படங்கள் தான் இவர்களின் காம்போவில் இடம்பெற்றிருக்கும். மேலும் கமல் சாதாரணமாகவே ஈகோ பார்ப்பவர் அவ்வாறு இருக்க கவுண்டமணியின் கலாய்ப்பு இவரை பெரிதும் வெறுப்படைய செய்து சுத்தமா பிடிக்காமல் போய்விட்டதாம்.