Thug Life: மணிரத்னம் இயக்கத்தில் கமல் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு, திரிஷா என பலர் நடித்திருக்கும் படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.
விரைவில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தக்கர்கள் பற்றிய வரலாறு என்ற செய்தி கசிந்துள்ளது.
தக் லைஃப் என்றால் நமக்குத் தெரிந்தது கெத்து அல்லது கேலியாக பேசுவது என்பது தான். ஆனால் அது கேலி கிடையாது. வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ரத்த சரித்திரம் என்பது பலருக்கும் தெரியவில்லை.
அந்த வகையில் யார் இந்த தக்கர்கள் என்பதைப் பற்றி இங்கு காண்போம். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு கொள்ளையர்கள் தான் இந்த தக்கர்கள்.
கமலின் தக் லைஃப் கதை இதுவா.?
ராஜஸ்தான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் காட்டுப்பகுதிகளில் பயணிக்கும் வணிகர்களிடம் கைவரிசையை காட்டுவார்கள்.
அவர்களை கழுத்தை நெரித்து கொன்று பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள். சில சமயம் இறந்தவர்களை கிணற்றில் தள்ளி விடுவார்கள்.
இந்த குழுவில் இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்வார்கள். புதிதாக இணைய வேண்டும் என்றால் குழுவில் பயிற்சி பெற்று பின்னர் சேர்த்துக் கொள்ளப்படும்.
தங்களுடைய கஷ்டத்திற்கு என்று இல்லாமல் இதை ஒரு தொழிலாகவே அவர்கள் செய்து வந்துள்ளனர். அதிகபட்சமாக இவர்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என ஆய்வுகள் சொல்கின்றது.
ஆங்கிலேயர்களிடம் கூட இவர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டி இருக்கின்றனர். அதன் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை ஒழித்து கட்ட சட்டம் இயற்றியது.
அதைத்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பிடிப்பட்ட தக்கர்கள் சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளான சம்பவமும் உண்டு. சிலருக்கு மரண தண்டனை, சிலர் நாடு கடத்தப்பட்டது என இவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.
இந்த வரலாற்றை மையப்படுத்தி தான் தக் லைஃப் படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்த ரத்த சரித்திரம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.