1. Home
  2. கோலிவுட்

லோகேஷுடன் நேருக்கு நேர் மோதும் மன்சூர்.. டிசம்பர் 15-ஐ குறிவைக்கும் 8 படங்கள், வெற்றி யாருக்கு.?

லோகேஷுடன் நேருக்கு நேர் மோதும் மன்சூர்.. டிசம்பர் 15-ஐ குறிவைக்கும் 8 படங்கள், வெற்றி யாருக்கு.?

This Week Release Movies: சினிமா வெறியர்களுக்கு வார இறுதி வந்தாலே கொண்டாட்டம் தான். அதிலும் இந்த வாரம் அதாவது நாளை டிசம்பர் 15 அன்று மொத்தமாக எட்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது லோகேஷின் ஃபைட் கிளப்.

உறியடி புகழ் விஜயகுமார் நடிப்பில் அப்பாஸ் ஏ ரஹமத் இயக்கியிருக்கும் இப்படம் வடசென்னை பற்றிய கதைக்களமாக உருவாகி இருக்கிறது. நேற்று இதன் ப்ரிவ்யூ ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படத்தைப் பார்த்த சினிமா விமர்சகர்கள் பலரும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி விமர்சனங்களை பதிவிட்டனர்.

அதுவே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி இருக்கிறது. அடுத்ததாக மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. குடியால் நடக்கும் அவலங்களைப் பற்றிய கதை என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதே போல் திரிஷா விவகாரத்தில் மன்சூருக்கு எதிராக லோகேஷ் கருத்து தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பதும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக வைபவ், முரளி ஷர்மா, யோகி பாபு பார்வதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலம்பனா நாளை வெளியாகிறது.

மேலும் அசோக் செல்வன், மேகா ஆகாஷ் நடித்துள்ள சபாநாயகன், கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணகியும் நாளை வெளியாகிறது. இத்துடன் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் நா நா படமும் இந்த போட்டியில் குதித்துள்ளது.

அதை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஸ்ரீகுமார் ஜெய், அங்கனா நடித்துள்ள தீதும் சூதும் எந்தன் முகவரி ஆகிய படங்களும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இப்படியாக வெளியாகும் இந்த எட்டு படங்களில் வெற்றிவாகை யாருக்கு என்பது நாளை தெரிந்து விடும்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.