1. Home
  2. கோலிவுட்

ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் 3 படங்கள்.. கூலி வசூலுக்கு முட்டுக்கட்டை போடும் படம்

ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் 3 படங்கள்.. கூலி வசூலுக்கு முட்டுக்கட்டை போடும் படம்

Rajini : இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியானது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக லைஃப் என்று வெளியான நிலையில் சில படங்கள் நடுநிலையான விமர்சனத்தை தான் பெற்றது.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் எக்கச்சக்க பட்டாளமே நடித்திருக்கின்றனர்.

இப்படம் எப்படியும் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும்படி வார் 2 படமும் அன்று வெளியாகிறது. ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளியாகும் மூன்று படங்கள்

வார் 2 படமும் பான் இந்தியா படமாக வெளியாகுவதால் கூலி படத்தின் வசூலில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளாக் மெயில் படமும் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இதில் முக்கியமாக கூலி படத்திற்கு தான் தமிழ் ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் முந்தைய படமான லியோ கலவையான விமர்சனங்களை பெற்றது.

அந்த நெகட்டிவ் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் கூலி படத்தை லோகேஷ் எடுத்து இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் கூலி படத்திற்கான பிரமோஷனும் இப்போதே தொடங்கி படு பயங்கரமாக நடந்து வருகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.