Thug Life : கமல் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியானது. திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது ரெட்ரோ படத்தை போல் தக் லைஃப்க்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை சிறிய பட்ஜெட்டில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், சத்யராஜ் மற்றும் ரோஷினி ஆகியோர் நடிப்பில் மெட்ராஸ் மேட்னி படம் உருவானது.
சென்னை பின்னணியை கொண்ட இந்த படம் உணர்வுபூர்வமான மற்றும் நகைச்சுவை தன்மையுடன் எடுக்கப்பட்டிருந்தது. சென்னை வாசிகளின் கலாச்சாரம் மற்றும் நகைச்சுவை தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டதால் மெட்ராஸ் மேட்டினி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ரெட்ரோ போல் தக் லைஃப்க்கு விழுந்த அடி
இப்போது இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது. படம் வெளியான அன்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இரண்டு ஷோக்கள் மட்டுமே மெட்ராஸ் மேட்னி படத்திற்கு கொடுக்கப்பட்டது. அப்போதும் வரவேற்பு அதிகமாக இருப்பதால் இப்போது ஸ்கிரீன்கள் அதிகப்படுத்த உள்ளனர்.
இதனால் தக் லைஃப் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே போல் தான் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியான சமயத்தில் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி வெளியானது. அப்போது டூரிஸ்ட் ஃபேமிலிக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் ரெட்ரோ படத்தில் வசூல் குறைந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன், லப்பர் பந்து போன்ற படங்களின் வரிசையில் மெட்ராஸ் மேட்னி படமும் அமைந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமே இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் இப்போது ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.