ஞாயிற்றுக்கிழமையும் போனியாகாத தக் லைஃப்.. 4-வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Thug Life Collection : மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் கடந்த வாரம் வியாழக்கிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்திற்கு படக்குழு பிரமாண்டமாக பிரமோஷன் செய்தனர். சிம்பு, திரிஷா, அபிராமி போன்ற எக்கச்சக்க நட்சத்திர பட்டாலும் நடித்திருந்தனர்.

ஆனால் முதல் நாளே ரசிகர்களிடம் கடுமையான விமர்சனத்தை தக் லைஃப் படம் பெற்றது. இவ்வாறு எதிர்மறை விமர்சனத்தினால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது. மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றாக இணைந்து தான் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

ஆனால் போட்ட பட்ஜெட்டை எடுப்பார்களா என்பதை சந்தேகமாக அமைந்திருக்கிறது. முதல் நாளில் இப்படம் 16 கோடி வசூலை செய்திருந்தது. இரண்டாவது நாள் வெள்ளிக்கிழமை அப்படியே வசூல் பாதியாக குறைந்து 7 கோடி மட்டுமே வசூல் பெற்றது.

தக் லைஃப் படத்தில் நான்காவது நாள் வசூல்

மூன்றாவது நாள் சனிக்கிழமை மேலும் வசூல் குறைந்து 7.5 கோடி கலெக்ஷன் செய்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் எப்படியும் அதிக வசூல் செய்துவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக மேலும் குறைத்து 6.30 கோடி தான் வசூல் செய்தது.

மொத்தமாக தக் லைஃப் படம் 35 கோடி வசூலை பெற்றிருக்கிறது. விடுமுறை நாளிலும் இந்த படம் போனி ஆகாமல் இருந்தது படக்குழுவுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன்னதாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் கமலின் அமரன் படங்கள் அதிக வசூலை கொடுத்தது.

இப்போது தக் லைஃப் படம் 50 கோடி வசூலை பெறவே திணறி வருகிறது. மேலும் சிம்பு ரசிகர்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் இருவருமே இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு போட்ட நினைத்தனர். அவர்களுக்கு தக் லைஃப் வசூல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.