Vijay : தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எப்படியும் வசூல் செய்துவிடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பத்தாவது இடத்தில் விஜய்யின் பிகில் படம் உள்ளது. இந்தப் படம் 140 கோடி வசூல் செய்திருக்கிறது. அதேபோல் 9 மற்றும் 8-வது இடங்களும் விஜய்யின் படங்கள் தான். மாஸ்டர் 142 கோடி மற்றும் வாரிசு 145 கோடி வசூலை செய்துள்ளது.
இதையடுத்து ஏழாவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படம் கிட்ட தட்ட 158 கோடி வசூலை அள்ளியது. அதோடு இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
அதிக வசூல் செய்து டாப் 10 இடத்தில் உள்ள படங்கள்
இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் இதுவரை 172 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் லோகேஷ், கமல் கூட்டணியில் உருவான விக்ரம் படம் தான் உள்ளது.
விக்ரம் படம் 181 கோடி வசூலை ஈட்டி படக்குழுவுக்கு லாபத்தை கொடுத்தது. இதற்கு அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படம் 189 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இப்படம் ரஜினிக்கு இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்திருந்தது.
அடுத்ததாக மூன்றாவது இடத்தில் விஜய்யின் கோட் படம் உள்ளது. 220 கோடி வசூலை இப்படம் கொடுத்திருந்தது. இரண்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் படம் 222 கோடி கலெக்ஷன் செய்திருந்தது.
முதலிடத்தை விஜய்யின் லியோ படம் தான் பெற்றிருக்கிறது. கிட்டதட்ட 232 கோடி வசூல் செய்து வசூல் மன்னன் என்ற பட்டத்தை விஜய் தக்க வைத்துள்ளார்.