வாரிசுகளை களம் இறக்கிய டாப் 4 நடிகர்கள்.. இந்த சேவல் பந்தயம் அடிக்குமா பார்க்கலாம்?

Cinema : பொதுவாக வாரிசு என்ற வார்த்தையை நாம் அரசியல் தான் பார்த்திருக்கிறோம் வாரிசு அரசியல் வாரிசுகள் என்று ஆனால் தற்போது சினிமா துறையிலும் வாரிசு சினிமா வந்திருக்கிறது போல.

ஆமாங்க நம்ம தமிழ் திரை உலகத்துல உள்ள முன்னணி கதாநாயகர்கள் அனைவருமே தன் குடும்ப வாரிசுகளை திரை உலகத்தில் அறிமுகப்படுத்தி இருக்காங்க. பேர் போன இந்த முன்னாடி நடிகர்களைப் போல இவர்களும் நிலைத்து நிற்பார்களா என்று பார்க்கலாம்.

வாரிசுகளை களம் இறக்கிய டாப் 4 நடிகர்கள்..

தனுஷ் : நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் திரை உலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கதாநாயகர். அவரது தயாரிப்பில் அவர் தனது அக்கா மகனை தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தின் மூலம் தன் அக்கா பையன் “பவிஷ்” என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தனுஷை போல் “பவிஷும்” திரை உலகில் நிலைத்து நிற்பாரா பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி : பிரபல இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் தன் தங்கை மகன் “அஜய் திசன்” என்பவரை மார்கன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். விஜய் ஆண்டனி போல் இவரும் பிரபலமாவாரா பார்க்கலாம்.

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. இவரது பையன் சூர்யா விஜய் சேதுபதி அவர்கள் பீனிக்ஸ் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். விஜய் சேதுபதி அவர்களின் பெயரை சூர்யா விஜய் சேதுபதி அவர்கள் காப்பாற்றுவாரா பார்க்கலாம்.

விஷ்ணு விஷால் : நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் அவர்கள் நிறைய படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது இவர் தனது தம்பி ருத்ரா என்பவரை தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். “ஓஹோ எந்தன் பேபி” என்று வெளிவரவருக்கும் படத்தில் ருத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போன்று ருத்ராவும் பேரெடுத்து தருவாரா.

இந்த நான்கு சேவல்களும் பந்தயம் அடிக்குமா அடிக்காதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். திறமை இருந்தாலே அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்று விடுவார்கள் தமிழ் சினிமாவில். தன் திறமையை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.