1. Home
  2. கோலிவுட்

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு கிடைத்த அமோக வரவேற்பு

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு கிடைத்த அமோக வரவேற்பு

OTT Movies : தியேட்டரில் படங்களை பார்ப்பதை காட்டிலும் ஓடிடியில் படத்தை ரசிகர்கள் அதிகமாக பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் ஒரு முடி திருத்துபவரை பழிவாங்கும் படலத்தை கதையாகக் கொண்டிருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு விருதும் கிடைத்தது.

அடுத்ததாக நெட்பிளிக்ஸில் அமர் சிம் சம்கிலா படம் அதிக பார்வையாளர்களை பெற்றது. இம்தியாஸ் அலி இயக்கத்தில் தில்ஜித் தோசாஞ் மற்றும் பரினீதி சோப்ரா ஆகியோர் நடித்த இந்த படம் 12.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது.

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்

கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபதா லேடிஸ் படம் நகைச்சுவை படமாக வெளியானது. மணப்பெண் தவறுதலாக மாற்றப்பட்ட கதையைக் கொண்டது. இந்த படமும் சமீபத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் கல்கி 2898 AD படம் வெளியானது. இந்த படம் தியேட்டரில் நல்ல வசூலை பெற்ற நிலையில் ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

ஜியோ ஹாட் ஸ்டாரில் ஜூலை இரண்டாம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது. சசிகுமார், சிம்ரன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து குடும்பக் கதையாக இந்த படம் வெளியானது. இது ஓடிடியில் ஐந்தாவது மிக அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.