இவரு பெரிய ராஜமௌலியா.. இதுதாண்டா ரியல் சக்சஸ், சாதித்து காட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்

Tourist Family: இந்த மாதிரி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என சொல்ல வைத்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. மக்களின் அமோக வரவேற்பால் இயக்குனரும் பட குழுவினரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயிருக்கின்றனர்.

திரும்பும் பக்கம் எல்லாம் பாராட்டு மழை தான். அதேபோல் படத்தின் இயக்குனர் தற்போது வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதில் பிஸியாக இருக்கிறார்.

எல்லோரும் படத்தை பாராட்டி இருந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி பாராட்டி ட்வீட் போட்டு இருக்கிறார். இது உண்மையில் ஒரு அறிமுக இயக்குனருக்கு கிடைத்த பெரும் பெருமை தான்.

இவரு பெரிய ராஜமௌலியா

அதிலும் ஒரு பிளாஷ்பேக் நிகழ்வை சொல்லியே ஆக வேண்டும். இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது, படம் இயக்குவதற்கு முன்பு நான் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்தேன்.

அங்கு ஆண்டு விழாவில் ஒரு ட்ராமா ஏற்பாடு செய்தோம். அப்போது பசங்க கிட்ட இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என சொல்லிக் கொடுத்தேன்.

அப்போது பின்னாலிருந்து ஒரு கமெண்ட். ஆமா இவரு பெரிய ராஜமவுலி பாகுபலி எடுக்குறாரு என கிண்டலாக வந்தது. அன்னைக்கு வீட்டுக்கு போகும்போது நான் அழுதுகிட்டே தான் போனேன் என கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அந்த ராஜமவுலியே இவருடைய படத்தை பாராட்டி இருக்கிறார். உண்மையிலேயே இதுதான் ரியல் சக்சஸ்.

அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு வெற்றியை கொடுத்துவிட்டார். ஆனால் அடுத்தது தான் இவருக்கான விஷ பரீட்சை. இரண்டாவது படத்தை கவனமா செலக்ட் பண்ணுங்க ப்ரோ என இவருக்கு பல அறிவுரைகள் வந்து கொண்டிருக்கிறது.