35 வயதுக்கு மேல் ஆனாலும் அப்போது இருந்த மாதிரியே இப்போது வரை தன்னுடைய கட்டழகை கச்சிதமாக வைத்திருக்கும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரின் மார்க்கெட்டும் இப்போதும் டாப் கீரில் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் குந்தவையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் திரிஷா மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகும் நயன்தாரா இருவருக்கும் இடையே தான் இப்போது பயங்கர போட்டி நிலவுகிறது.
இவர்களில் யார் அடுத்ததாக மணிரத்தினம்- கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்பதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. ஒரு பக்கம் நயன்தாரா மணிரத்தினத்தின் திரைப்படத்தில் நடிப்பது தான் தன்னுடைய நீண்ட கால ஆசை என அவரிடமே மேடையில் பகிரங்கமாக வாய்ப்பு கேட்டார்.
மேலும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மணிரத்தினம் கமலும் ஒன்று சேர இருக்கிறார்கள். அது உறுதியாகி போஸ்டர் வெளியிட்டார்கள். இந்த படத்தில் நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஆனால் தற்பொழுது மணிரத்தினம் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளாராம்.
இதனால் மணிரத்தினமே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதுவரை நயன்தாரா கமல் படத்தில் நடிக்கவில்லை காரணம் முத்தக் காட்சி இடம்பெறும் என்பதால் தான். திருமணத்திற்கு பிறகு எப்படி மீண்டும் கமலுடன் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை.
ஆனால் மணிரத்தினம் படத்தில் நடிக்க எனக்கு ஆசை என நயன்தாரா கூறி இருந்தார், அதனால் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் திரிஷாவின் பெயரும் இதில் அடிபடுகிறது. ஆகையால் இரண்டில் ஒருவர் நடிப்பாரா இல்லை இரண்டு பேரும் நடிப்பார்களா என பேசப்பட்டு வருகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.