1. Home
  2. கோலிவுட்

ஒவ்வொரு ஓட்டுக்காக தேடி வர போகும் தளபதி .. கப்பு முக்கியம் பிகிலு

ஒவ்வொரு ஓட்டுக்காக தேடி வர போகும் தளபதி .. கப்பு முக்கியம் பிகிலு

Thalapathy Vijay: இப்போதைக்கு திமுகவை எதிர்க்கும் அளவுக்கு மாற்றுக் கட்சி எதுவும் தமிழ்நாட்டில் இல்லை என்ற பிம்பம் உருவாகி இருக்கிறது. இதை எதிர்த்து பெரிய சக்தியாக எழுந்து நிற்பாரா தளபதி விஜய் என்பதுதான் மக்களின் பெரிய கேள்விக்குறியாக இருக்கப் போகிறது.

எத்தனை வருடங்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த விஜய் இப்போது அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் என்றால் கண்டிப்பாக ஏதோ பெரிய திட்டம் இருக்கும். அதற்கு அவருடைய நிர்வாகிகளும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

இதனால் விஜய் அடுத்தடுத்து தன்னுடைய திட்டத்தை சரியாக ஸ்கெட்ச் போட்டு செய்தே ஆக வேண்டும். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களில் அவருடைய கட்சியை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். சின்ன சின்ன திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு உள்ளும் இப்போதைக்கு தமிழக வெற்றிக்கழகம் நுழைந்து கொண்டு இருக்கிறது.

கப்பு முக்கியம் பிகிலு

இந்த மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்ட இருக்கிறார் விஜய். அத்தோடு GOAT படத்தின் அடுத்த கட்ட வேலைகளிலும் அவர் பங்கேற்க வேண்டும்.

கட்சி மாநாட்டை தொடங்க வேண்டும். இதற்கு அடுத்த நான்கு மாதங்கள் சரியாக இருக்கும். இதற்கிடையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் விஜயின் அடுத்த திட்டத்தை பற்றி நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார்.

விஜய் அடுத்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம். என்னதான் நடிகர் விஜய் என அவருடைய ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றாலும் பெண்கள் மற்றும் பெரியவர்கள் இடையே விஜய் யார் என அழுத்தமாக பதிய வேண்டும்.

அதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணம். விஜய் இதெல்லாம் செய்து முடிக்கவே ஆறு முதல் 8 மாதங்கள் ஆகலாம். விஜயின் அடுத்த குறிக்கோள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால் அரசியல் களத்தில் தான் அவருடைய கவனம் அதிகம் இருக்கிறது.

இதனால் தளபதி 69 படத்திற்கு எப்போது நேரம் ஒதுக்குவார் என்பதே இப்போது சந்தேகம்தான். அரசியல் தலைவர்கள் இதுபோன்ற சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டுக்கு புதிய விஷயம் கிடையாது.

ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை போன்றவர்கள் இதேபோன்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து இருக்கிறார்கள். இதைத்தான் அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் செய்ய இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.