TVK-Vijay: இந்த வருடம் திரையுலகில் அடுத்தடுத்த இழப்புகள் நடந்து வருகிறது. அதில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறப்பு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை அடுத்து தற்போது கவுண்டமணி வீட்டில் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவி சாந்தி உடல்நல குறைவு காரணமாக இன்று உயிர் நீத்துள்ளார்.
அதை அடுத்து சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி என திரை பிரபலங்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதில் தற்போது டி வி கே தலைவரும் நடிகருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக இவர் கொடைக்கானலில் ஜனநாயகம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இன்று படப்பிடிப்பை முடித்த அவர் சென்னை திரும்பினார்.
நேரில் வந்து ஆறுதல் சொன்ன TVK தலைவர்
அதை அடுத்து விஷயம் கேள்விப்பட்டு கவுண்டமணியின் இல்லத்திற்கு வந்த விஜய் அவரை தோளோடு அணைத்தபடி ஆறுதல் கூறினார்.
மேலும் அனைவரையும் காமெடி செய்து சிரிக்க வைத்த கவுண்டமணி இன்று இடிந்து போய் சோக முகத்துடன் இருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் சத்யராஜ் ஆறுதல் சொன்ன போது கூட அவர் கலங்கியபடியே தான் இருந்தார்.
அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த அவருடைய மனைவியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் எனவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.