சினிமாவை விட்டு விலகும் இரு நட்சத்திரங்கள்.. சைடு கேப்பில் டாப் இடங்களுக்கு போட்டி போடும் நடிகர்கள்

Two Big Actors Are Temporarily Leaving The Cinema: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்கள் தான் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பும். ஏனென்றால் அவர்களது ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று தந்து விடுவார்கள். இப்படி ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு தான் முதல் நாள் கலெக்சன் கோடிகளை குவிக்கும்.

இந்த சூழலில் தற்காலிகமாக சினிமாவை விட்டு இரண்டு நட்சத்திரங்கள் விலக முடிவு செய்து இருப்பதால் இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அடுத்து உள்ள நடிகர்கள் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது விஜய் மற்றும் அஜித் இருவரும் தான் இப்போது சினிமாவில் இருந்து சற்று ஓய்வெடுக்க நினைத்துள்ளனர்.

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக முழுவதுமாக அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். மற்றொருபுறம் அஜித்தின் விடாமுயற்சி தற்போது வரை தொடங்கிய பாடு இல்லை.

ஆனாலும் இந்த படத்தை முடித்துவிட்டு பைக் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆகையால் அஜித் மற்றும் விஜய் சினிமாவில் இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் முன்னணி இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம்.

இதனால் பெரிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள். எப்படியும் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக இவர்கள்தான் இருப்பதால் இந்த நடிகர்களுக்குள்ளே போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடிக்க இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதியும் சகட்டுமேனிக்கு படங்களில் நடிக்காமல் இப்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஆகையால் இந்த மூன்று நடிகர்கள் தான் அடுத்த கட்டத்தில் கடுமையான போட்டி போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.