இந்த ரெண்டு விஷயங்களால் சிம்பு பரம எதிரியாக நினைக்கும் ஹீரோ.. நயன்தாராவுடன் சேரவிடாமல் தடுத்த விஷப்பூச்சி

Actor Simbu: மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கி தற்போது டாப் கீரில் சென்று கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இருக்கும் சிம்புவை பார்க்கும் போது திரை உலகில் பலருக்கும் வியப்பளிக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த 10 வருடத்திற்கு முன்பு ஓவர் அழிச்சாட்டியம் செய்தவர்.

சரியான நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார், கொடுத்த கால் சீட்டை மறந்துவிட்டு ஊர் சுத்தி கொண்டு இருப்பார், இயக்குனர்களுடன் போதிய ஒத்துழைப்பு அளிக்க மாட்டார் என இவர் மீது வரிசையாக புகார்கள் எழுந்த வண்ணமே இருக்கும். ஆனால் இப்போது அப்படி கிடையாது. பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இன்று வரை சிம்பு இரண்டு பேரை தன்னுடைய எதிரிகளாகவே பார்த்து வருகிறார். அதற்கு காரணமும் இருக்கிறது. சிம்பு நயன்தாராவுடன் கிசுகிசுக்கப்பட்ட நேரத்தில் சிம்பு ஒப்பந்தமான ஒரு படத்தை தட்டி தூக்கி உள்ளார் நடிகர் ஒருவர். எப்படியும் அந்த இயக்குனர் நம்ம கிட்ட தான் வருவார் என தெனாவட்டாக இருந்த சிம்புவிற்கு அந்த ஹீரோ ஒப்பந்தமான உடன் கோபம் தலைக்கேறியது.

இன்று வரை அந்த ஹீரோவை சிம்பு எதிரியாகத்தான் பார்க்கிறார். 2011ம் ஆண்டு வெளியான கோ படத்தின் கதையை முதலில் படத்தின் இயக்குனரான கேவி ஆனந்த் சிம்புவுக்கு சொல்லி போட்டோ சூட் எல்லாம் எடுத்து, கிட்டத்தட்ட 90 சதவீதம் இவர்தான் ஹீரோ என்பது உறுதியானது.

ஆனால் சிம்பு கதையை இப்படி மாற்றுங்கள், ராதா மகள் கார்த்திகா கூட எல்லாம் நடிக்க முடியாது. நயன்தாராவை போடுங்கள் என கேவி ஆனந்த் இடம் திமிர் காட்டியிருக்கிறார். இதனால் சிம்புவை விட்டுவிட்டு குழந்தைத்தனமான ஹீரோ ஜீவாவை ஒப்பந்தம் செய்து விட்டார்.

கோ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு எப்படியும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்துவிடலாம், சேர்ந்து நடித்து பிக்கப் பண்ணிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிய சிம்புவுக்கு ஜீவா ஆப்பு வைத்தார். இதனால் கோ படத்தின் ஹீரோ ஜீவா மற்றும் படத்தின் இயக்குனர் கேவி ஆனந்த் இருவரையும் இப்போது வரை சிம்பு தள்ளியே வைத்திருக்கிறாராம்.