சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பதிலாக ரெண்டு வில்லன்கள்.. ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்

Actor Jayam Ravi: ஜெயம் ரவி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்ததற்கு முக்கிய காரணம் இவருடைய அண்ணன் மோகன் ராஜா தான். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் காம்பினேஷனில் வந்த படத்திற்கு ரொம்ப வருடமாக இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி கிட்டத்தட்ட 105 கோடி வசூலை பெற்றுக் கொடுத்தது. அத்துடன் இதில் ஜெயம் ரவியின் நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டுக்கள் கிடைத்தது.

அத்துடன் ரீ என்ட்ரியாக அரவிந்த்சாமி, சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் பக்கா வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் இவருடைய நடிப்பு தான் அதிக பிளஸ் பாயிண்ட் என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அந்த அளவிற்கு எங்கே பார்த்தாலும் சித்தார்த் அபிமன்யு என்று இவருடைய இமேஜ் உயர்ந்து விட்டது. மேலும் இதில் எதார்த்தமான நடிப்புடன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார்.

இப்படி தனி ஒருவன் படத்திற்கு மிகப்பெரிய சிறப்பாக அமைந்த விஷயங்களைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறது. இதில் ஹீரோவாக ஜெயம் ரவி கமிட் ஆகிய நிலையில், வில்லன் கேரக்டரில் சித்தார்த் அபிமன்யுக்கு பதிலாக இரண்டு வில்லன்கள் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதில் ஹீரோவாக நடித்த போது கிடைக்காத அங்கீகாரத்தை விட, எப்பொழுது வில்லனாக களமிறங்கினாரோ அப்பொழுதே இவருடைய ரேஞ்ச் கூட்டிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வில்லன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர் தான் எஸ்ஜே சூர்யா. இவர் தான் முக்கிய வில்லனாக நடிக்கப் போகிறார் என்று வெளியாகி உள்ளது.

அதற்கு அடுத்து சமீப காலமாக பெருசாக சொல்லும்படி வாய்ப்பு இல்லை என்றாலும் தேடி வருகிற வாய்ப்பை விடாமல் நடித்து வரும் பிரசன்னா இப்படத்தில் மற்றொரு வில்லனாக இணையப் போகிறார். மேலும் இப்படத்திற்கான கதையை வெறித்தனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் உதவி இயக்குனர். அந்த வகையில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.