உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிவிட்ட சூர்யாவை, ரசிகர்கள் நடிப்பு அரக்கனாகவே பார்க்கின்றனர். இவர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஏனென்றால் படத்தின் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதால் சூர்யாவிற்கு அது செட் ஆகாது என முடிவெடுத்து அந்தப் படத்தை ஊத்தி மூடிவிட்டனர். தற்போது அதே நிலைதான் வாடிவாசலுக்கும் வந்துவிடுமோ என்று ரசிகர்கள் பலரும் கலங்குகின்றனர். ஏனென்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என 5 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். எனவே சிறுத்தை சிவா படத்தை முடித்து அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்க செல்வார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
வாடிவாசல் கதை பாதி மட்டுமே வெளியாக இருப்பதாக வெற்றிமாறன் இன்னும் நேரம் கேட்டுள்ளார். இதனால் வரும் ஏப்ரல் மாதம் சூர்யா சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த கதை ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதை ஆனால் விஜய்க்கு நேரம் இல்லாததால் இந்த கதையில் தற்போது சூர்யா நடிக்க போகிறார்.
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. அந்த படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் கதையம்சம் கொண்ட படத்திலும், ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து கதை தயாரிக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.