வடிவேலு சினிமாவுக்கு வந்த புதிதில் படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார். கேப்டன் விஜயகாந்த் நம்ம ஊரு பையன் என்று அவருக்கு படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன் பிறகு தனது திறமையால் வடிவேலு சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார். அதோடு வடிவேலுக்கு கர்வமும் தொத்திக் கொண்டது.
இதனால் தன்னை வளர்த்து விட்ட கேப்டன் விஜயகாந்த் உடனே வடிவேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தவசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் மோதல் உருவாகி இருந்தது. இதனால் விஜயகாந்துக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி உடன் வடிவேலு சேர்ந்து கொண்டார்.
அது மட்டும் இன்றி பிரச்சார மேடைகளிலும் விஜயகாந்தை பற்றி கேலி, கிண்டல் உடன் பேச ஆரம்பித்தார். ஏற்றிவிட்ட ஏணியையே கீழே தள்ளி விடுவது போல விஜயகாந்தை தரக்குறைவாக பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. இதனால் வடிவேலு சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.
அதன் பிறகு ஆட்சி மாறிய பிறகு இவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவருடைய 23ஆம் புலிகேசி படத்தை தவிர ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாமே தோல்வியை தான் தழுவியது.
அதன் பிறகு இயக்குனர் ஷங்கருடனும் தகராறு ஏற்பட்டு பிரச்சனையானது. இதனால் வடிவேலு சில காலம் படங்களில் நடிக்க கூடாது என ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு தவளை போல தானாக வாயை கெடுத்து கொள்வது போல கடைசியில் தனக்குத்தானே பிரச்சனையை வளர்த்து கொண்டார்.
மேலும் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தோல்வியை தழுவியது. இப்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து உள்ளார். இதுவும் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இதனால் என்னென்ன பிரச்சனைகளை வடிவேலு சந்திக்க இருக்கிறாரோ.